உங்களுடைய ஆதார் கார்டை எந்த பிரவுசிங் சென்டர் போகாமல் நீங்களே உங்களுடைய செல்போனில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
அது எப்படி என்று ஸ்டெப் பை ஸ்டெப்பாக பார்க்கலாம்.
முதலில் இந்த My Aadar என்ற லிங்கை டச் செய்து Softwareரை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
உங்களுடைய மொபைல் எண்ணை கொடுத்து ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு ஆறு இலக்க OTP எண் வரும், அதை பதிவு செய்து கொள்ளுங்கள் பின்னர் செயலி ஓபன் ஆகும்.
சாப்ட்வேரில் டவுன்லோட் என்ற பட்டனை அழுத்துங்கள், அதில் உங்களுடைய 12 இலக்க ஆதார் எண் காட்டும் அதை சரியாக டைப் செய்து கொள்ளுங்கள்.
பின்னர் வெரிஃபிகேஷன் குறியீடு டிஸ்ப்ளேயில் தோன்றக்கூடிய நான்கு அல்லது ஆறு இலக்க எண்ணை தட்டுங்கள்.
நீங்கள் பதிவு செய்த மொபைல் என்னுடன் ஆதாரை இணைத்தால், அந்த எண்ணிற்கு ஆறு இலக்க OTP எண்கள் வரும்.
அதனை இதில் பதிவு செய்யுங்கள், பிறகு வெரிஃபிகேஷன் என்ற பட்டனை அழுத்துங்கள்.
பிறகு உங்களுடைய ஆதார் டவுன்லோட் ஆகிவிடும்.
ஆதாரை திறக்க உங்களுடைய பெயரில் முதல் நான்கு லெட்டரை ஆங்கிலத்தில் பெரிதாக எழுதிக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் பிறந்த வருடத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.
உதாரணமாக SOZH1993 இதுபோல உங்கள் பெயரில் வரும் முதல் நான்கு Letter நீங்கள் பிறந்த வருடத்தையும் அதில் குறிப்பிட்டவுடன் என்டர் செய்யுங்கள் உங்கள் ஆதார் அட்டை ஓபன் ஆகிவிடும்.
0 Comments