வணக்கம்
சாய் பாபாவின் எளிமையான விரதம்.
சாய் பாபாவிற்கு எப்படி விரதம் எடுப்பது
எதை சாப்பிடுவது எதை சாப்பிடக்கூடாது
என்ன பண்ணலாம் என்ன பண்ணக்கூடாது
எத செய்யலாம் எத செய்யக்கூடாதுனு
எல்லாத்தையும் பத்தி நாம இந்த பக்கத்துல தெரிஞ்சுக்கலாம். இதுல இருக்குற படி நீங்க இந்த விரதத்தை முழுமையா செஞ்சீங்கன்னா உங்களுடைய வேண்டுதல் 100% பலிக்கும். ஒரு வேலை நீங்கள் எடுக்கும் விரதத்தில் ஏதும் குறைபாடுகள் இருந்தால் உங்கள் விரதம் பலிக்க சிறிது காலா தாமதம் ஆகலாம். எனவே இந்த பக்கத்தை பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் கவனத்துடனும் படியுங்கள் சிறிது கவன குறைவும் உங்களுக்கு பலன் கொடுக்காமல் போகலாம்.
இந்த விரத முறை படி நீங்கள் சாய் பாபாக்கு 9 வாரம் அல்லது42 நாள் விரதம் இருந்து வந்தால், உங்கள் வேண்டுதல் 100% நடக்கும்.
நாம் செய்யக்கூடிய சின்ன சின்ன தவறுகள்தான் நம் வேண்டுதல் பலிக்க சில காலமாகிறது.
சாய் பாபாக்கு எளிமையான முறை படி விரதம் எப்படி? எடுப்பது பற்றி நாம் பார்க்கலாம்.
இந்த விரதத்தை நீங்கள் எதாவது ஒரு வியாழன் கிழமை ஆரம்பிக்க வேண்டும் பிறகு எதாவது ஒரு வியாழக்கிழமை முடிக்க வேண்டும் அது மட்டும் இல்லாமல் இந்த விரதத்தை பௌர்ணமி வளர்பிறையில், இந்த விரதத்தை ஆரம்பிக்க வேண்டும், உங்கள் பிரச்சனையை பொருத்து தேய்பிறையிலயோ அல்லது வளர்பிறையிலையோ இந்த விரதத்தை முடிக்க வேண்டும்.
எந்த வேண்டுதலை எந்த பிறையில் முடிக்க வேண்டும் என்று கடைசியில் சொல்லிருக்கிறேன் தயவு செய்து பொறுமையுடன் படிக்கவும். படித்து புரியவில்லை என்றால் டெலெக்ராம் தலத்தில் என்னை தொடர்புக்கொண்டு ஆலோசனை பெறுங்கள் Or youtubeல் வீடியோவை பாருங்கள்.
வீடியோ லிங்க் இதோ :-
நீங்கள் ஒரு வளர்பிறை வியாழனை தேர்ந்தெடுங்கள். கவனிக்கவும் அந்த வியாழன் அம்மாவையாக இருக்க கூடாது. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் வார்பிறையாக அல்லது பௌர்ணமியாக இருக்க வேண்டும் சரியா?
எடுத்துக்காட்டு இப்பொழுது அம்மாவாசை முடிந்து ஒரு வாரத்துக்குள் வளர கூடிய பிறையில் இந்த விரதத்தை வியாழகிழமையில் ஆரம்பிங்கள்.
புதன் கிழமை இரவில் அசைவம் சாப்பிட்டால், அந்த பாத்திரத்தை கழுவி போட்டு விட்டு உங்கள் வீட்டையும் மஞ்சத்தூள் கல் உப்பு போட்டு கழுவியோ அல்லது துடைத்தோ விடுங்கள்.
வளர்பிறை வியாழன் கிழமையில் அதி காலை 4:30am மணிக்கு எழுந்து விடுங்கள். பிறகு உங்கள் காலை வேலையை முடித்து விட்டு, நீங்கள் குளிக்கும் (RR தமிழ் LivEல் இருந்து வந்துள்ள சாய் புனித தீர்த்தத்தை வைத்து வாளியில் ஊற்றி குளியுங்கள் ) அல்லது கொஞ்சம் மஞ்சத்தூள் மற்றும் கல் உப்பு போட்டு கலக்கி விட்டு குளியுங்கள். சோப்பு போட்டு குளிக்க கூடாது, சுடு தண்ணீரில் குளிக்க கூடாது, தலைதான் குளிக்க வேண்டும், அதுவும் வெறும்தண்ணீரில் தான் குளிக்க வேண்டும்.
(RR தமிழ் LivEல் இருந்து வந்துள்ள சாய் புனித தீர்த்தம் கங்கை யமுனை இராமேஸ்வரம் போன்ற புண்ணிய தீர்த்தத்துக்கு சமம்)
உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம் எதுக்காக இப்டி குளிக்க வேண்டும் என்று? சரிதானே, அதாவது நாம் முதலில் செயும் எந்த ஒரு காரியமா இருந்தாலும் நாம் முதலில் கடல் நீரில் போய் குளித்து விட்டு பிறகு காரியங்களை தொடங்கினாள், அது பலன் குடுக்கும். அதாவது கல் உப்பில்தான் கெட்ட சக்திகளை போக்க கூடிய சக்தி இருக்கு. இதை பயன்படுத்தி குளித்தால் உங்க மேல்களில் இருக்கும் கேட்ட சக்திகள் போய்விடும். என்பது ஐதீகம், மஞ்சத்தூள் கிருமி நாசினி அதாவது உங்கள் மேல்களில் இருக்கும் கிருமி_ஐ போக்கிவிடும் அதாவது உங்கள் மேல்கள் பரிபூரண சுத்தமாக இருக்கும் புரிகிறதா? புரியவில்லை என்றால் கமெண்ட்டில் கேளுங்கள்.
பிறகு நீங்கள் உங்கள் வீட்டின் கதவை திறந்து விட்டுவிட்டு நிலை கதவு படிக்கட்டை மஞ்சள் தூள் கல்லு உப்பு போட்டு துடைத்து விடுங்கள். ஹால் பூஜா ரூம் உங்கள் படுக்கை அரை அனைத்தையும் மீண்டும் ஒரு முறை மஞ்சள் தூள் கல்லுப்பு போட்டு துடைத்து விடுங்கள் சரியா?
உங்களிடம் சாய் பாபா சிலை இருந்தால் அதை RR தமிழ் LivEல் இருந்து வந்துள்ள சாய் புனித தீர்த்தத்தை வைத்து அபிஷேகம் செய்து விடுங்கள்.
அல்லது மஞ்சத்தூள் கல்லுப்பு போட்டு சாய் சிலையை கழுவி விடுங்கள் பிறகு சாய்க்கு உங்கள் விருப்பம் போல் அலங்காரம் செய்துவிடுங்கள். நா அடுத்த பதிவில் சாய்க்கு எப்படி அலங்காரம் செய்வது பற்றிய ஒரு பதிவை போடுகிறேன்.
இப்பொழுது சாய்க்கு அலங்காரம் செய்து முடித்து விட்டாச்சு சரியா?
சாய்_க்கு என்ன பிரசாதம் வைக்க வேண்டும் எது சாய்_க்கு பிடிக்கும் எது பிடிக்காது?
சாய் பாபாக்கு இது தான் பிடிக்கும், அது தான் பிடிக்கும்னு ஒன்றும் இல்லை. அப்போ உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம் பிறகு ஏன் சாய்_க்கு இனிப்பு வைக்கிறாங்கனு, இல்லையா? நான் ஏற்கணமே சொல்லிருக்கேன் சாய் உயிருடன் இருந்த ஷிர்டியில் இனிப்பு நெய் இதுதா அங்கு அதிகம் கிடைக்க கூடிய பொருள். அதுனாலதா இனிப்பு வைக்கிறாங்க சாய்க்கு இருப்பதை கொண்டு எது வைத்தாலும் அவர் ஏற்றுக்கொள்வர். இல்லாமல் நிறைய செய்தலோ, அல்லது வச்சுக்கிட்டா எதுவும் பண்ணாமல் இருந்தாலோ, தா அவரு கோவப் படுவர். ஆகையால் உங்கள் தகுதிக்கு உங்களால் என்ன முடியுமோ, அதை வைத்து நெய்வேத்தியம் படையுங்கள்.
நீங்கள் எதை வைத்தாலும் அதை வைத்துவிட்டு சாய் இன்று என்னால் இதுதான் முடிந்தது. என் நெய்வேத்திய பிரசாதத்தை ஏற்றுக்கொண்டு எனக்கு நள் ஆசிர்வாதம் செயுங்கள். அப்டினு சொல்லிட்டு நீங்கள் உங்கள் வேண்டுதலை ஆரம்பிக்கலாம்.
பிறகு சாய் க்கு நீங்கள் விளக்கேற்றுங்கள். அதாவது ஒரு அகல் விளக்கு அல்லது அணையா விளக்கு ஏற்ற வேண்டும் மத்த விளக்கு ஏத்த கூடாது, அதாவது குத்து விளக்கோ, இல்லை குபேர விளக்கோ, ஏற்ற கூடாது. அகல் விளக்கு அல்லது அணையாவிலக்கு மட்டுமே ஏற்ற வேண்டும்.தேய்பிறையில் எந்த பிரச்சனைக்கு எப்படி முடிக்க வேண்டும்?
குடும்பத்தில் சண்டைகள் அல்லது சண்டை பிரச்சனைகள் இருந்தாலோ அத தேய்பிறையில் முடிக்க வேண்டும்.
கடன் பிரச்னை இருந்தால் அதை தேய்பிறையில் முடிக்க வேண்டும் அதாவது ஒரு பிரச்னை முடிய வேண்டும் அப்டி என்றால் அதை தேய்பிறையில் முடிக்க வேண்டும்.
முழுப்பிறை எப்படி தேய்ந்து, தேய்ந்து ஒன்றும் இல்லாமல் போகிறதோ அதே போல் உங்களுக்கு இருக்கும் பிரச்னை ஒன்றும் இல்லாமல் முடிந்து போகணும்னு நீங்கள் நினைத்தாள் அதை நீங்கள் தேய்பிறையில் முடியுங்கள்.
எடுத்துக்காட்டு
எனக்கு பணப்பிரச்சனை முடியனும், கடன் பிரச்னை முடியனும், குடும்பத்தில் சண்டை பிரச்னை முடியனும், விவாகரத்து பிரச்னை முடியனும், இப்படி முடிய கூடிய பிரச்சனைகளை நாம் தேய்பிறையில் முடிக்க வேண்டும்
புரிகிறதா? ????????
வளர்பிறையில் எந்த பிரச்சனைக்கு எப்படி முடிக்க வேண்டும்.?
எது உங்களுக்கு நிலைத்து நிற்க வேண்டுமோ அதை வளர்பிறையில் முடியுங்கள்
எடுத்துகாட்டு எனக்கு தொழில் நல்ல லாபம் கிடைக்க வேண்டும், என் காதல் கைகூட வேண்டும், பிரிந்து இருந்த எனது மனைவி அல்லது கணவன் என்னுடன் சேரவேண்டும் எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும். எனக்கு திருமணம் நடக்க வேண்டும். நான் வீடு கட்ட வேண்டும். இந்த மாதிரி உங்கள் வேண்டுதல் நிறைவேற நீங்கள் பௌர்ணமியில் இந்த விரதத்தை முடிக்க வேண்டும்.
சாய் பாபா நம்மளை விரதம் எடுக்க சொல்லவில்லை. அவர் நம்மிடம் சொல்லும் வார்த்தை நம்பிக்கை பொறுமை மட்டுமே அதே கடைபிடித்தால் போதும் என்று சாய் சொல்லுகிறார். அதே போல் இந்த 42நாள் விரதம் எப்படி சாத்தியமாகும்/ உதாரணம் உங்கள் அப்பா இல்லை அம்மா அவர்களிடம் உங்களுக்கு பிடித்த பொருளை கேட்டும் போது அவுங்கள வாங்கித்தர மாற்றங்கள் சரியா அதே நாம் அழுது உருண்டு அடம்பிடித்தால் உடனே வாங்கி தருவார்கள் இல்லையா அதேயேதான் நாம் இங்கு சாய் இடம் செய்கிறோம்.
நன்றி .
உங்களுக்கு சில சந்தேகம் ஏற்படும்
I) கேள்வி
9 வார விரதத்திற்கும் 42 நாள் விரதத்திற்கும் என்ன வேறுபாடு .
பதில்:- 9 வாரம் எடுக்கும் போது விரதம் பலிக்க சில நாட்கள் ஏற்படும் அதே 42 நாள் எடுக்கும் பொது உங்கள் வேண்டுதல் உடனே நடக்கும்.
II) கேள்வி விரத தினங்களில் உணவு எவ்வாறு எடுப்பது?
பதில்:- காலை உணவு காலை 11:59am க்குள் இருக்க வேண்டும். மதியம் சாப்பிட கூடாது இரவு உணவு 9:00pm க்குள் இருக்க வேண்டும்.
சாப்பிட கூடாது என கட்டாயம் இல்லை, ஆனால் சாப்பிடாமல் விரதம் எடுத்தால் நிச்சயமாக உடனே பலிக்கும். உங்கள் ஜாதகத்தில் நடக்காத விஷயம் கூட நீங்கள் சாய் பாபா வை நினைத்து வழிபட்டால் நிச்சயம் நடக்கும். அனால், உங்கள் ஜாதகத்தில் இல்லை உங்கள் வாழ்க்கையில் நடக்காத விஷயத்தை உங்களுக்கு நடக்க வேண்டும் என்றால், உங்களுக்கு பிடித்த ஒரு உணவு பொருளை கண்டிப்பாக நீங்க சாய் பாபா க்கு தனமாக குடுக்க வேண்டும், உங்கள் வாழ் நாளில் அதை நீங்கள் தொட கூடாது. இப்படி செய்தல் உங்கள் வேண்டுதல் உடனே நடக்கும். அது மட்டும் இல்லாமல் நிலைத்து நிக்கும் .
2) 42 நாள் விரதமோ அல்லது 9 வார விரதமோ அந்த நாட்களில் நல்லது கேட்டது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துக்க கூடாது. மேலும் அந்த நாள்ளில் அசைவம் எடுத்து கொள்ள கூடாது.
3) கசப்பு தர கூடிய எந்த உணவையும் நாம் சேர்த்துக்கொள்ள கூடாது, இந்த விரத காலங்களில் அப்படி சேர்த்தால் நம் வேண்டுதல் பலிக்காது. அது 9 வாரமா இருந்தாலும் சரி இல்லை 42 நாள் விரதம் இருந்தாலும் சரி.
4) பெண்களின் இன்னல்கள் பிரச்சனையின் போது அந்த நாட்களை கணக்கில் எடுத்து கொள்ளாமல் மற்ற நாட்களில் விரதம் எடுப்பது சரி.
5) ஆண்களாக இருந்தால் தொடர்ந்து 42 நாள் எடுப்பது நல்ல பலனை தரும்.
6) விரத நாட்களில் முக அலங்காரம் பண்ண கூடாது.
7) இரவு வேலைய இருந்த பகலில் வரும் போது குளித்து முடித்து விட்டு பூஜை செய்த பின்பு படுப்பது நல்லது.
8) பெண்களின் இன்னல்கள் பிரச்சனையின் போது சாய் பாபாவை நினைக்கவோ அல்லது அவர் சிலை எடுத்து உங்கள் பக்கத்தில் வைப்பதோ, அல்லது உங்கள் மடி மேல் வைப்பதோ, கூடாது தீட்டு காலங்களில் சாய் பாபா முகத்தை கூட பார்க்க கூடாது. மீறி பார்த்தால் சாய் தண்டனை தர மாட்டாரு ஆனால் மேலிருந்து பார்க்கும் அந்த இறைவன் நிச்சயம் நமக்கு கர்மவினை பலன் கொடுப்பார். இதுவே பொதுவாக பெண்கள் கஷ்ட படுவதற்கு கரணம் ஆகும்.


0 Comments