Header Ads Widget

Eb Bill

உங்களுடைய மின்சார கட்டணத்தை செலுத்த ஈபி ஆபீஸ் இ சேவை மையமும் பிரவுசிங் சென்டர் போக தேவை இல்லை இனி உங்களுடைய மின்சார கட்டணத்தை நீங்களே எளிமையாக உங்களுடைய மொபைல் போனில் கட்டிக் கொள்ளலாம் அது எப்படி என்று ஸ்டெப் பை ஸ்டெப்பாக சொல்லுகிறேன் படித்துப் பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.

EB பில் இந்த லிங்கை டச் செய்து சாஃப்ட்வேர்க்குள் போய்க்கொள்ளுங்கள் பின்னர் உங்களுடைய மொபைல் எண் மற்றும் உங்களுடைய இபி நம்பரையும் கொடுத்து ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் பின்னர் பாஸ்வேர்டாக நான்கு இலக்கு எண்களை பதிவு செய்யுங்கள்.

 நீங்கள் Softwareரை ஓபன் செய்த பிறகு இந்த மாதிரி தான் இருக்கும் இதில் பேய்மென்ட் (payment) என்ற பட்டனை அழுத்துங்கள்.

 இதில் Enter your consumer no என்ற இடத்தில் உங்களுடைய ஈபி முழு நம்பரையும் டைப் செய்து கொள்ளுங்கள். 

உங்களுக்கு ஈபி முழு நம்பர் தெரியவில்லை, என்றால் உங்களுடைய பழைய ஈபி ரசிதை பாருங்கள். 

அது நிலை குறியீட்டு என்னுடன் இருக்கும் அந்த எண்ணை இந்த இடத்தில் டைப் செய்து கொள்ளுங்கள்.

பிறகு செக் check என்ற பட்டனை அழுத்துங்கள்.

 பிறகு உங்களுக்கு இந்த மாதிரியான next page வரும் இதில் உங்களுடைய மின்சார கட்டண எண் மற்றும் அது யார் பெயருடன் இருக்கின்றது அவர்கள் எந்த ஊர் என்பதை இங்கு காட்டும் இதில் நீங்கள் படித்துப் பார்த்துவிட்டு கன்ஃபார்ம் என்ற பட்டனை அழுத்த வேண்டும்.

 இங்கு உங்களுடைய மின்சார கட்டணம் மற்றும் தொகை எவ்வளவு என்று அடுத்த பக்கத்தில் காட்டும் அதை சரிபார்த்த பின்பு choose Payment என்ற பட்டனை அழுத்த வேண்டும்.

 இதில் உங்களுடைய பேமண்டை எந்த வழியாக நீங்க செலுத்த விரும்புகிறீர்கள் என்ற இடத்தை காட்டும் இதில் நீங்கள் UPI/QR என்ற பட்டனை அழுத்திய பிறகு உங்களுடைய கூகுள் பே போன் பேடிஎம் காட்டும் அதில் உங்களுக்கு பிடித்த App_l பணத்தை கட்டி விடுங்கள்.

இப்படி செய்வதன் மூலம் வீட்டில் இருந்தபடியே நீங்கள் மின்சார கட்டணத்தை செலுத்தலாம் மற்றும் உங்கள் பக்கத்து தெரு பக்கத்து ஊரிலிருந்து வரக்கூடிய வயதானவர்களுக்கு நீங்கள் வழியாக காசைக்கட்டி கூடுதல் கட்டணமாக பத்து ரூபாய் சார்ஜ் செய்து நீங்கள் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம்.. 

Post a Comment

0 Comments